NH ரோட்டில் ரத்தமும், சதையுமாக சிதறிய சென்னையின் பிரபல கல்லூரி மாணவர்கள் - தலைநகரை உலுக்கிய மரண ஓலம்
NH ரோட்டில் ரத்தமும், சதையுமாக சிதறிய
சென்னையின் பிரபல கல்லூரி மாணவர்கள்
தலைநகரை உலுக்கிய 5 குடும்ப மரண ஓலம்
சிரித்த நொடியில் பிரிந்த உயிர்
கார் மீது வடமாநில லாரி அதிவேகமாக மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... நடந்தது என்ன?... விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...
அப்பளம் போல் நொறுங்கிய காரில் இருந்து மாணவர்களின் சடலங்களைப் பிரித்தெடுப்பதற்குள் போதும்போதுமென ஆகி விட்டது போலீசாருக்கு...
சென்னை அருகே காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு பயிலும் மாணவர்கள் தான் இந்த சேர்த்தன், யுகேஷ் , நித்திஷ், நித்திஷ் வர்மா, ராம்கோமன், சைதன்யா, விஷ்ணு...
இவர்கள் அனைவருமே ஆந்திர மாநிலம் ஓங்கோலைச் சேர்ந்தவர்கள்...
கல்லூரி விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்று விட்டு மீண்டும் கல்லூரிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர் 7 பேரும்...
கார் திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது...
அப்போது...வட மாநில பதிவு எண் கொண்ட லாரி அதிவேகமாக கல்லூரி மாணவர்கள் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது...
அப்பளம் போல் நொறுங்கி சுக்குநூறானது கார்...
அந்தரத்தில் தூக்கி வீசப்பட்டார் ஒரு மாணவர்...4 மாணவர்கள் காரில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்...
சேத்தன், யுகேஷ், நித்திஷ், நித்திஷ் வர்மா, ராம்கோமன் ஆகிய ஐவரும் விபத்தில் பலியான நிலையில்...
சைதன்யா மற்றும் விஷ்ணு ஆகிய 2 மாணவர்கள் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்...
அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்...
திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் தலைமையிலான போலீசார் இறந்த மாணவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்...
விடுமுறை முடிந்து பல கனவுகளோடு மகிழ்ச்சியாக கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாணவர்கள் கண்ணிமைக்கும் நொடியில் உயிரைப் பறிகொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...