``இனி கடவுள் தான் காப்பாத்தணும்'' என சொன்ன போலீஸ்.. தொட பயமா? - யார் அந்த கட்ட பஞ்சாயத்து கும்பல்?

Update: 2024-07-09 04:39 GMT

இனி கடவுள் தான் காப்பாத்தணும்'' என சொன்ன போலீஸ்.. தொட பயமா? - ஊராட்சி தலைவருக்கே இந்த கதியா? யார் அந்த கட்ட பஞ்சாயத்து கும்பல்?

செங்கல்பட்டு அருகே, ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 9 பேரின் குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

செங்கல்பட்டு மாவட்டம், கடலூர் பெரியக்குப்பத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் ஆதிலட்சுமியின் கணவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த ஞானவேல் என்பவருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆதிலட்சுமி

காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பியதாக தெரிகிறது. இந்நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்ததாற்காக, ஞானவேல் தரப்பில் கட்டபஞ்சாயத்து செய்து, ஆதிலட்சுமி உள்ளிட்ட 9 பேரின் குடும்பங்களை, 5 ஆண்டுகளுக்கு ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கூவத்தூர் காவல்நிலையத்திலும், ஆட்சியர் அலுவலகத்திலும் ஆதிலட்சுமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த அந்த கும்பல் ஒதுக்கி வைக்கப்பட்ட 9 குடும்பங்கள் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், போலீசார் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். எனினும் போலீசார் நடவடிக்கை எடுக்காமல், கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும் என போலீசார் கூறுவதாக தெரிவித்தார். இதுகுறித்து, ஆதிலட்சுமி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர், மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்