6 ஆம் வகுப்பு மாணவி கைவிரல் எலும்பு முறிவு? - அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது பரபரப்பு புகார்

Update: 2024-02-01 06:08 GMT

செங்கல்பட்டு மாவட்டம் ஒழலூர் பகுதியை சேர்ந்தவர் பாபு. இவரது இளைய மகள், அதே பகுதியிலுள்ள ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்தநிலையில் அவரை, ரேங்க் கார்டில் புகைப்படம் ஒட்டவில்லை என்பதற்காக தலைமை ஆசிரியர் பிரம்பால் அடித்ததாக, அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதில் மாணவிக்கு கை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சூழலில், மாணவியை தாக்கிய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்