விநாயகர் சிலைகளில் ரசாயன கலப்பு - சிலை தயாரிப்பு கூடத்திற்கு சீல்

Update: 2023-09-16 01:58 GMT

பாளையங்கோட்டை கிருபா நகரில் வடமாநில தொழிலாளர்கள் விநாயகர் சிலைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சிலைகளில் ரசாயன கலப்பு இருப்பதாக கூறி விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்ல தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதை கண்டித்து, கடந்த மூன்று தினங்களாக பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே பணம் செலுத்தி தயார் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனிடையே விநாயகர் சிலைகள் இருக்கும் இடத்தை இரும்பு தகடுகள் கொண்டு பூட்டி வருவாய் துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சீல் வைத்தனர். விநாயகர் சிலை தயாரிப்பு கூடத்தில் வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில் அவர்கள் வெளியே சென்று வருவதற்கு மட்டும் ஏதுவாக சிறிய வழி ஒன்றும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்