நாட்டுக்கே பெரிய ட்விஸ்ட்டாக கொடுத்த ஜார்கண்ட் டைகர்.. அதிர்ச்சியில் I.N.D.I.A.

Update: 2024-08-27 04:40 GMT

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன், வரும் 30-ஆம் தேதி பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைய இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, மாநில முதல்வராக சம்பாய் சோரன், பிப்ரவரியில் பொறுப்பேற்றார்.

கடந்த ஜூன் மாதம், ஹேமந்த் சோரன் ஜாமினில் வெளியே வந்ததும், அவர் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் சிலருடன் டெல்லியில் முகாமிட்ட சம்பாய் சோரன், தொடர்ந்து பாஜவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் சந்தித்துப் பேசினார்.

இதுகுறித்து அசாம் முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிடுடள்ள பதிவில், சம்பாய் சோரன், ஆகஸ்ட் 30-ஆம் தேதி ராஞ்சியில் அதிகாரப்பூர்வமாக பாஜகவில் சேருவார் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்