7 மணிநேரம்... கிண்டி கிளறிய CBI... Ex DSP சொன்ன செய்தி சிக்கலில் பொன்.மாணிக்கவேல்..?

Update: 2024-08-11 07:11 GMT

தமிழக காவல்துறையில் சிலை கடத்தல் துறையில் பணியாற்றிய

முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு சொந்தமான இடத்தில் சிபிஐ சோதனை நடத்தியுள்ள நிலையில்...சோதனை எதற்காக என்பது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு ..

முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ சோதனை

தமிழக காவல்துறையில் மிரட்டும் ஹிட்லர் மீசை, விரைப்பான போலீஸ் யூனிபார்மில் வலம் வந்த அதிகாரி, சென்னையில் 800க்கும் மேற்பட்ட சிலைகளை கண்டெடுத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி என தமிழக மக்களின் ஹீரேவாக வலம் வந்தவர் பொன் மாணிக்கவேல்..

இந்த நிலையில் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் வீட்டில் 7 மணி நேரத்திற்கும் மேலாக சிபிஐ சோதனை மேற்கொண்டது காவல்துறை வட்டத்தில் இல்லாமல் பொது மக்களிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்னதான்...நடந்தது..

இதனை தொடர்ந்து சிலையைக் கடத்தி விற்றதாகக் கடந்த 2017 ம் ஆண்டு டிஎஸ்பி காதர் பாட்ஷாவை, பொன்.மாணிக்கவேல் கைது செய்ய... சிலை கடத்தல் வழக்கு மேலும் பரபரப்பானது. தொடர்ந்து நெல்லை பழவூர் கோயில் சிலை கடத்தல் வழக்கிலும் காதர் பாட்ஷாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அந்த வழக்கிலும் பொன் மாணிக்கவேல் அவரை கைது செய்தார்.

இந்த நிலையில் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் பிரிவில் சிறப்பாக செயல்படுவதாக கூறி ஓய்வு பெறும் நாளில் அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து கடந்த 2019 ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே ஆண்டு ஜாமினில் வெளிவந்த டிஎஸ்பி காதர் பாட்ஷா திடீர் திருப்பமாகப் பொன். மாணிக்கவேல் மீது வழக்கு தாக்கல் செய்தார்..

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கின் உண்மை தன்மையை கண்டறியுமாறு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தாக்கல் செய்த பொன்.மாணிக்கவேலின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ அதிகாரிகள் முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு சொந்தமான அவரது வீட்டில் சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தி சில ஆவணங்களை எடுத்து சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பொன்மாணிக்கவேல், சிலைகடத்தல் குற்றவாளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

தன் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று சிபிஐ விசாரணையில் தெரிய வந்துள்ளதாக கூறும் முன்னாள் டிஎஸ்பி காதர் பாட்ஷா, பொய் வழக்கை பதிவு செய்த பொன்.மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்