அதிகரிக்கும் விஷச்சாராயம் மரணம்...4 கேள்விகளுக்கு தீவிரமாக விடை தேடும் CBCID

Update: 2024-06-22 02:44 GMT

அதிகரிக்கும் விஷச்சாராயம் மரணம்...4 கேள்விகளுக்கு தீவிரமாக விடை தேடும் CBCID

சேலம் அரசு மருத்துவமனையில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ள சாராயம் அருந்தி உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம் மாவட்ட மருத்துவமனைகள், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சேலம் மருத்துவமனையில் 47 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 15 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி உதவி புலன் விசாரணை அதிகாரி குமார் தலைமையிலான குழு 2 ஆவது நாளாக விசாரணை நடத்தியது. 2 ஆவது நாளில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இறந்தவர்களுக்கு எப்போதிலிருந்து மது பழக்கம் இருந்தது? மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பு எப்போது அவர்கள் சாராயம் அருந்தினார் மற்றும் அவர் எங்கு சென்று அறிந்தினார், அவருடன் யாராவது சென்றார்களா? என்ற கேள்விகளை முன்வைத்து விசாரணையை மேற்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்