கவுன்சிலர் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்குப்பதிவு - தேர்தல் நடத்தும் அதிகாரிகள் புகார்
கவுன்சிலர் மீது ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்குப்பதிவு - தேர்தல் நடத்தும் அதிகாரிகள் புகார்
#cuddalore #electioncommission #dmk #thanthitv
கடலூர் மாவட்டம், புவனகிரியில் அரசுப் பள்ளி ஆசிரியரின் தபால் வாக்கை தி.மு.க. வார்டு கவுன்சிலர் பதிவு செய்ததாகப் புகார் எழுந்துள்ளது. கத்தாழை கிராமத்தில் அரசு பள்ளி ஆசிரியராக உள்ள பெருமாத்தூரை சேர்ந்த கார்த்திக் ராஜாவின் தபால் வாக்கை, தி.மு.க. வார்டு கவுன்சிலர் ஜோதி வாக்குசாவடி மையத்திற்கு வந்து தபால் பெட்டியில் வாக்கை செலுத்தி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், தி.மு.க. கவுன்சிலர் ஜோதி மீது ஆள்மாறாட்டம் செய்ததாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்