கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த அரசுப்பேருந்து நடத்துநர், தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழித்துறை பணிமனையில் நடத்துநராக பணிபுரியும் சஜூ என்பவர், பணிமனை கட்டுப்பாட்டு அதிகாரி ஜெய்பால் மீது குற்றச்சாட்டு வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் ஓய்வு, விடுமுறை வழங்காமல் தொடர்ச்சியாக வேலை செய்ய ஜெயபால் வற்புறுத்தி வருவதாக சஜூ குறிப்பிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலால் தற்கொலை செய்யப் போவதாகவும், தனது தற்கொலைக்கு ஜெயபால்தான் காரணம் என்றும் சஜூ தெரிவித்துள்ளார்.