திருப்பூரில், சுரங்க பாலம் அமைக்க நிலம் கையகப்படுத்த முன்னறிவிப்பு கொடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தை இடித்ததாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர் .
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 35 - வது வார்டில் சுரங்க பாதை அமைக்க திட்டமிடப்பட்டு நிலம் கையகப்படுத்த திருப்பூர் மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டது. இதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பு இடத்திற்கான இழப்பீடு தொகை வழங்கப்படும் என நில உரிமையாளர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் எந்த விதமான முன்னறிவிப்பு என்று திடீரென மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரங்களுடன் பட்டா நிலத்தில் கட்டிடங்களை இடிக்க துவங்கினர். இதனால் அதிர்ச்சி அடைந்த நில உரிமையாளர்கள் தங்களுக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் மேலும் நிலத்திற்கான இழப்பீடு தொகைக வழங்காமல் ஆற்று புறம்போக்கு வகை என அதிகாரிகள் தெரிவிப்பது தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளதாக கூறியுள்ளனர்.
பட்டா நிலம் எவ்வாறு வகை மாற்றம் செய்யப்பட்டது என கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நில உரிமையாளர்களுடன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.