மோடி 3.O-ன் பட்ஜெட் 1.O - தாக்கலாகும் அதிமுக்கிய மசோதாக்கள்

Update: 2024-07-22 04:46 GMT

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்த கூட்டத்தொடர் மொத்தம் 19 அமர்வுகளைக் கொண்டிருக்கும். கூட்டத்தொடரின் முதல் நாளில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். 23ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மேலும், ஜம்மு காஷ்மீருக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். ஜூலை 24ஆம் தேதி நடப்பு ஆண்டு பட்ஜெட் மீதான விவாதங்களும், ஜூலை 25ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் கான பட்ஜெட் மீதான விவாதங்களும் நடைபெறும். கூட்டத் தொடரில் ஆறு மசோதாக்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விமான சட்டத்திற்கு பதிலாக, பாரதிய வாயுயன் விதேயக் சட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கொதிகலன்களின் பாதுகாப்புக்காக, புதிய பாய்லர் மசோதா, காபி மற்றும் ரப்பர் உற்பத்தி குறித்த ஊக்குவிப்பு மற்றும் மேம்பாட்டு வளர்ச்சி மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்