சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த பலத்த மழையால், பல பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு வரை பலத்த மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிண்டியில் இருந்து வேளச்சேரி செல்லக்கூடிய ஐந்து பர்லாங் சாலையில், சுமார் அரை கிலோமீட்டர் தூரம் குளம்போல் மழைநீர் தேங்கி நின்றதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இருந்து வெளியேறிய மழைநீர், கால்வாயில் செல்லாமல் சாலையில் தேங்கியதால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது தவிர மீனம்பாக்கத்தில் இருந்து ஈக்காட்டுத்தாங்கல் செல்லும் சாலை, குரோம்பேட்டை, கத்திப்பாராவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், சுமார் 3 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் ஊர்ந்து சென்றன.