கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், அதிமுக பெண் கவுன்சிலர் அனிலாவை, அவரது கணவரே கீழே தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 41வது வார்டுக்கு உட்பட்ட வட்டவிளை பகுதியில் நியாய விலைக்கட்டிடம் திறக்கப்படாதது தொடர்பாக பாஜக எம்.எல்.ஏ, எம்.ஆர்.காந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த கவுன்சிலர் அனிலாவின் கணவர் சுகுமாரன், "நான் தான் உள்ளாட்சி பிரதிநிதி" என்று கூறி அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து, தனது மனைவி அனிலாவையும் பலர் கண்முன்னே வேகமாக கீழே தள்ளிவிட்டு ஆவேசமாக சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளை கணவன்கள், பொம்மை போன்று ஆட்டி படைப்பதாக ஆங்காங்கே புகார்கள் எழும் நிலையில், நாகர்கோவிலில் நிகழ்ந்த இச்சம்பவம், அதை உண்மையாக்கி உள்ளது.