கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் இருசக்கர வாகனத்தை திருடி 20 கிலோ மீட்டர் வரை டோ செய்த நபரை போலீசார் கைது செய்தனர். ஜம்பை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவரது பைக் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த நிலையில், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தாசர்புரம் பகுதியை சேர்ந்த தசரதனை போலீசார் கைது செய்து வாகனத்தை மீட்டனர்.