கழுத்தை நெரித்த கடன் சுமை - குடும்பமே எடுத்த சோக முடிவு - சென்னையில் அதிர்ச்சி
சென்னை மணலியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3பேர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மாதவரம் பால்பண்ணை பெரியசேக்காடு கிருஷ்ணப்பன் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன்-லோகேஸ்வரி தம்பதிக்கு காவியா என்ற பெண்குழந்தை உள்ளது. சிறு தானியங்கள் விற்கும் கடை நடத்தி வந்த ஜெகநாதனுக்கு, வியாபாரத்தில் போதிய வருவாய் இல்லாததால், வீடுகட்ட வங்கியில் வாங்கியிருந்த கடனை கட்ட முடியாமலும், மேலும் பலரிடம் கடன் வாங்கியும் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று வெகு நேரமாகியும் வீடு திறக்கப்படாமலிருந்ததால், சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜெகநாதன் தாய்க்கு தகவலளித்தனர். உள்ளே திறந்து பார்த்தபோது, 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். வீட்டிலிருந்து கைப்பற்றிய கடித்தத்தைக் கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.