பல்ஸ் இருந்தும் குழந்தை இறந்ததாக கூறிய ஹாஸ்பிடல்..4 நாளுக்கு பின் நிஜமாகவே நடந்த அதிர்ச்சி

Update: 2024-06-18 07:52 GMT

பல்ஸ் இருந்தும் குழந்தை இறந்ததாக கூறிய ஹாஸ்பிடல்..4 நாளுக்கு பின் நிஜமாகவே நடந்த அதிர்ச்சி - கதறும் உறவினர்கள்

திருப்பூரில், முறையான சிகிச்சை அளிக்காததால் 4 நாள் குழந்தை உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் வள்ளியம்மாள் நகர் பகுதியை சேர்ந்த பாத்திமா என்பவருக்கு கடந்த 13ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. 4 நாட்களாக இன்குபேட்டரில் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தை பிறந்தபோதே இறந்துவிட்டதாக கூறி துணியில் சுற்றி கொடுத்த‌தாகவும், குழந்தை உயிருடன் இருப்பதாக கூறிய பின்னரே இன்குபேட்டரில் வைத்து பராமரித்த‌தாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 4 நாட்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், திடீரென குழந்தை இறந்துவிட்டதாக கூறி, பாத்திமாவை மருத்துவமனையை விட்டு வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியதாகவும் குற்றம் சாட்டினர். குழந்தையின் மரணத்திற்கு, முறையாக சிகிச்சை அளிக்காத‌தே காரணம் என குற்றம் சாட்டிய உறவினர்கள், குழந்தையின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்