சங்கரநாராயண சாமி கோவிலில் பட்டு சேலைகள் ஏலம் - போட்டி போட்டு வாங்கி சென்ற பெண்கள்
சங்கரன்கோவில் சங்கரநாராயணர்ச ாமி கோவிலில் ஏலம் விடப்பட்ட பட்டு சேலைகளை பெண்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோமதிஅம்பாள் திருக்கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விலை உயர்ந்த சேலைகளை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஊழியர்கள் ஏலம் விட்டனர். விலை உயர்ந்த பட்டுப்புடவைகளை குறைந்த விலைக்கு ஏலம் விட்டதால் போட்டி, போட்டு மக்கள் வாங்கி சென்றனர். பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலை ஐந்தாயிரம் ரூபாய்க்கும், ஐந்தாயிரம் மதிப்புள்ள சேலை இரண்டாயிரம் ரூபாய்க்கும் கிடைத்ததால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்தனர்