கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான கடந்த செப்டம்பர் 15 ந்தேதி காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதன் மூலம் 1 கோடியே 6 இலட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வீதம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள 7 லட்சத்து 35 ஆயிரம் பயனாளிகளுக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் நிதியுதவி வழங்கும் திட்டத்தை சென்னைகலைவாணர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதேபோல் அனைத்து மாவட்டங்களிலும், அமைச்சர்கள் தலைமையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இதன் மூலம் மொத்தம் 1 கோடியே 13 இலட்சத்து 84 ஆயிரத்து 300 மகளிருக்கு, நவம்பர் மாதத்திற்கான உதவித்தொகையினை வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள் என்று அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.