வழக்கறிஞரை தாக்கிய விவகாரம்.. கீழே படுத்து உருண்ட பெண்.. குண்டுக்கட்டாக தூக்கி அரெஸ்ட் செய்த போலீஸ்
ராசிபுரம் அருகே, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தியவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கிச்சென்று கைது செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நாமக்கல் மாவட்டம் வெள்ளக்கல்பட்டியை சேர்ந்த ராமசாமி மற்றும் மாணிக்கம் ஆகியோர் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடந்த போது மாணிக்கத்தின் வழக்கறிஞர் பாலாஜியை, ராமசாமி அவரது மகள்கள் ரம்யா, சௌமியா உள்ளிட்ட 4 பேர் தாக்கியுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் ராமசாமி தரப்பினரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.