விசேஷத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்தவர் கண்ட காட்சி... வீட்டு ஓனருக்கு பறந்த அதிர்ச்சி செய்தி

Update: 2024-10-11 10:42 GMT

ஜெயங்கொண்டம் அருகே ஓய்வு பெற்ற

மின்வாரிய அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 33 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நெல்லித்தோப்புவை சேர்ந்தவர் ராமலிங்கம். மின்சாரத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவர், தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் வீட்டை பூட்டிவிட்டு அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். பத்திரிக்கை வைப்பதற்காக உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து, உறவினர் அளித்த தகவலின்பேரில், ராமலிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து ராமலிங்கம் அளித்த புகாரின்பேரில், போலீசார் அங்கு பதிவான கைரேகைகளை வைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்