அரியலூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, சட்டவிரோதமாக மண் எடுத்து விற்பனை செய்தது தொடர்பாக விசாரணை நடத்த கோரி பழனிச்சாமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வு, தேசிய நெடுஞ்சாலை அமைக்க பணிகள் மேற்கொண்ட இடங்களை அரியலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்தது.