கொட்டித்தீர்த்த கனமழை..! வெள்ளத்தில் மூழ்கிய தரைமட்ட பாலம்.. திகைத்த பொதுமக்கள்!

Update: 2024-10-21 02:05 GMT

கொட்டித்தீர்த்த கனமழை..! வெள்ளத்தில் மூழ்கிய தரைமட்ட பாலம்.. திகைத்த பொதுமக்கள்! | ஆரணி

பெரியபாளையம் அருகே ஆரணியாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முழுவதுமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்திலும், ஆந்திராவிலும் பரவலாக கனமழை பெய்ததால், ஆரணியாற்றில் கடந்த 2 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ள பெருக்கால் ஆரணி அருகே உள்ள காரணி கிராமத்திற்கு செல்லும் தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதே போல மங்களம் கிராமத்திற்கு செல்ல ஆற்றின் குறுக்கே மக்கள் பயன்படுத்தி வந்த மண் பாதையும் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீரில் வேகத்தால் தரைப்பாலம் சிறிது சிறிதாக அரித்து வந்த நிலையில், தற்போது முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால், அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர். எனவே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்