வீட்டில் சடலமாக கிடந்த மனைவி, பிள்ளைகள்... கணவன் எங்கே..? அதிர்ச்சியில் அரக்கோணம்

Update: 2024-09-07 08:56 GMT

திருப்பத்தூர் மாவட்டம் அரக்கோணம் அருகே, மனைவி, 2 பிள்ளைகள் வீட்டில் சடலமாக கிடந்த நிலையில், தலைமறைவான கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.

சுவால்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருந்துக்கடை உரிமையாளர் விஜயன் என்பவரின் வீடு நீண்டநேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினரும் உறவினர்களும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கதவை உடைத்து திறந்தபோது, விஜயனின் மனைவி மீனாட்சி, மகன் யுவனேஷ், மகள் பவித்ரா ஆகியோர் சடலமாக கிடந்தனர். விஜயன் மாயமாகியிருந்தார். இதனையடுத்து, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வ ழக்குப் பதிவு போலீசார் கொலையா, தற்கொலையா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்