மத்தியமேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இதற்கு ஹாமூன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலானது நாளை(25) தேதி வங்கதேசத்தின் கரையைக் கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் புயல் உருவானதை குறிக்கும் வகையில் எண்ணூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.