முன்னாள் நகராட்சி ஆணையர் வீட்டில்.! அதிரடி காட்டிய லஞ்ச ஒழிப்பு துறை.. லட்சகணக்கில் சிக்கிய ஆவணங்கள்

Update: 2024-01-05 04:31 GMT

கடையநல்லூர் மற்றும் புளியங்குடியில் நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த பவுன்ராஜ் என்பவர் வருமானத்திற்கு அதிகமாக 2 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், கடந்த 2021-ஆம் ஆண்டு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் மீதான லஞ்ச புகார் தொடர்பாக, தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருடைய வீடு மற்றும் அவருடைய தாயார் வீடு, தாயார் பெயரில் உள்ள ஜே.எஸ்.ஆர் கார்மெண்ட்ஸ் நிறுவனம் உள்ளிட்ட 3 இடங்களில் விருதுநகர், நெல்லை, தென்காசி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களை சேர்ந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையில், 3 இடங்களில் இருந்து 45 சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தற்போது கிடைத்துள்ள ஆவணங்களை வைத்து முறையான விசாரணை நடத்தப்படும் எனவும், அதன் பிறகு அரசுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்