நாங்குநேரி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டியது மாநில அரசின் கடமை அல்லவா எனக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னணியில் இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை தேவை என வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவரின் கல்வி பொறுப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்று கொண்டதற்கு அண்ணாமலை வரவேற்பு தெரிவித்துள்ளார்.