அண்ணாமலை சென்றதால் உருவான வெற்றிடம்.. கிடைத்த வாய்ப்பில் இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா

Update: 2024-09-03 04:27 GMT

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கையை புறக்கணிக்க மாநில அரசுக்கு உரிமை இல்லை என்று பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை இயக்கம் தொடங்கப்பட்டது. அதில், ஹெச்.ராஜா பாஜக உறுப்பினராக தன்னை புதுப்பித்துக் கொண்டார். நிகழ்ச்சியில், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக துணை தலைவர் வி.பி.துரைசாமி, பாஜக மூத்த தலைவர்கள் ஹச்.வி.ஹண்டே, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா , பாஜக உறுப்பினர் சேர்க்கை அக்டோபர் 15 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெறும் என்று கூறினார். ஏற்கனவே இருக்கக்கூடிய உறுப்பினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்களுடன் சேர்த்து தமிழக பாஜகவில் 1 கோடி உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினர். தமிழக பாடத்திட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக கூறிய அவர்,

தேசிய கல்விக் கொள்கை தொடர்பான கஸ்தூரி ரங்கன் அறிக்கையை மறுக்க மாநில அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்