"ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள்.. காவல்துறை திணறல்" - அன்புமணி பரபரப்பு அறிக்கை

Update: 2024-07-29 09:12 GMT

ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள்.. காவல்துறை திணறல்" - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

எந்த அச்சமும் இல்லாமல் குற்றவாளிகள் நடமாடுவதாகவும், இதைத் தடுக்க முடியாமல் காவல்துறை திணறிக் கொண்டிருப்பதாகவும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே நாளில் மட்டும் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடலூர் நகர அதிமுக வட்ட செயலாளர் பத்மநாதன், சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பா.ஜ.க. கூட்டுறவு அணி மாவட்ட செயலாளர் செல்வகுமார், கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் பேரூராட்சியின் காங்கிரஸ் உறுப்பினர் உஷாராணியின் கணவர் ஜாக்சன் ஆகியோர் கொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக தோல்வியடைந்து விட்டது என்பதையே காட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.சென்னை காசிமேடு பகுதியில், 17 வயது சிறுவன் கஞ்சா போதையில் கையில் கத்தியுடன், இன்னொரு சிறுவனை கொடூரமாக தாக்கும் காணொலி காட்சிகள் இணையதளங்களில் வேகமாக பரவி வருவதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த இரு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழக அரசு பதவி விலக வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்