``தமிழகத்தின் தலை மேல் கத்தி" - சுப்ரீம்கோர்ட் கையில் 69% உயிர்நாடி.. பகீர் கிளப்பும் அன்புமணி

Update: 2024-07-02 10:46 GMT

69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாப்பதற்காவது

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென, பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கோடை விடுமுறைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் வரும் 8ம் தேதி தொடங்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு எந்த நேரமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

69 சதவீத இடஒதுக்கீட்டின் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில்,

அதன் ஆபத்தை உணராமல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு மறுத்து வருவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது கடினமான ஒன்றல்ல.

தமிழக அரசுக்கு இருக்கும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி ஒரு மாதத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்