"மாணவிகள் மீது கை வைக்கும் காம கொடூரன்களுக்கு..." - அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்
மாணவிகள் மீதான பாலியல் அத்துமீறல்களில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்தாலும், பெரிய தண்டனை வழங்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநில கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற பின்னர் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவகாரங்கள் மற்றும் தற்போதைய நிலவரங்களை குறித்து பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.