கிருஷ்ணகிரி அருகே நாச்சிக்குப்பத்தை சேர்ந்த பாஸ்கர் ராவ் என்ற 65 வயது முதியவர். தனது தோட்டத்திற்கு மக்காத கோழி கழிவுகளை உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்துள்ளார். இதனால் கிராமம் முழுவதும் துர்நாற்றம் வீசியதாகவும், இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதை, பாஸ்கர் ராவிடம் பலமுறை கூறியும், அவர் கேட்காததால் முதியவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கிராம மக்கள், ஒரு கட்டத்தில் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. முதியவர் அளித்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாவட்டம் நிர்வாகமும் முதியவரிடம் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.