அம்மன் கோயில் தீமிதி திருவிழா.. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! | Thiruvallur | Kovil Festival

Update: 2023-08-28 06:33 GMT

திருவள்ளூர் மாவட்டம் பெரியகாவனத்தில் உள்ள எல்லைமுத்து அம்மன் கோயில் தீமிதி திருவிழா, விமரிசையாக நடைபெற்றது. சோலையத்தம்மன் கோயிலில் இருந்து மேள, தாளம் முழங்க பக்தர்கள் எல்லைமுத்து அம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர். சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, காப்பு கட்டி விரதமிருந்த 100க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், சுற்றுப்புறங்களைச் சேர்ந்த ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்