"ஒடிசாவை தமிழர் ஆட்சி செய்ய முடியுமா?" அமித்ஷா பரபரப்பு பேச்சு | Amithsha | Thanthitv

Update: 2024-05-21 16:36 GMT

நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் ஆட்சி நடக்கும் ஒடிசாவில், நாடாளுமன்றத் தேர்தலோடு, சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரத்தில் நவீன் பட்நாயக்கிற்கு பக்கபலமாக நிற்கும் தமிழர் வி.கே. பாண்டியனை குறிவைத்து, வெளி மாநிலத்தை சேர்ந்தவர் என பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது. ஒடிசாவில் பிரசாரம் செய்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, நவீன் பட்நாயக் ஒடிசாவின் கலாச்சாரம், பெருமையை சிதைத்து வருகிறார் என குற்றம் சாட்டினார். பூரி ஜெகநாதரின் பக்தர்கள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கோயில் கருவூலத்தை கொள்ளையடிக்கிறார் எனவும் கோயில் கருவூல சாவி களவுபோனது வெட்கக்கேடானது எனவும் அமித்ஷா விமர்சித்தார். ஒடிசாவில் நடைபெறும் தேர்தல் அதன் பெருமையை பறைசாற்றும் தேர்தல், ஒடிசாவை ஒரு தமிழர் ஆட்சி செய்ய முடியுமா என்றும் அமித்ஷா கேள்வி எழுப்பினார். மாநிலத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என கூறிய அமித்ஷா, ஒடிசா மண்ணில் பிறந்த, ஒடியா மொழியை பேசும் ஒரு மண்ணின் மைந்தன் மாநிலத்தை ஆட்சி செய்வார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்