"தமிழகத்தில் எய்ம்ஸ் சித்த மருத்துவ கல்லூரி..? - மக்களுக்கு குட் நியூஸ்"
சென்னை அமைந்தகரை, அறிஞர் அண்ணா அரசு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவமனையில் யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது...
தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடியும் கலந்து கொண்டார். தரவரிசை பட்டியலில் மாணவி ஸ்ரீலேகா 199.50 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், காஞ்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ 2ம் இடத்திலும் உள்ளனர்... நிர்வாக இட ஒதுக்கீட்டில் 197.5 மதிப்பெண்களுடன் அரியலூரைச் சேர்ந்த சுஷ்மிதா என்ற மாணவி முதலிடத்திலும், தேனியைச் சேர்ந்த வைத்தீஸ்வரி 195.5 மதிப்பெண்களுடன் 2ம் இடத்திலும் உள்ளனர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், வரும் 5ம் தேதி தமிழகம் வரும் மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவாலிடம் திருச்சியில் எய்ம்ஸ் சித்த மருத்துவக் கல்லூரி அமைக்க கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார்...