அதிமுக புள்ளி படுகொலை.. பேஸ்புக்கில் `கொலை' சபதம் எடுத்த அண்ணனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Update: 2024-08-29 06:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே, ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு ஆவடி காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ஜெயலட்சுமி. இவரின் கணவர் நடராஜன். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் நடராஜனின் தம்பியுமான அதிமுகவை சேர்ந்த பார்த்திபன் கடந்தாண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில், தம்பி கொலைக்கு காரணமானவர்களை பழி தீர்க்க போவதாக கூறி தன் முகநூல் பக்கத்தில் நடராஜன் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார், நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். இந்நிலையில் சட்டவிரோத பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடராஜனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்