"என் மனைவி எதிரே கழுத்தை நெரித்த அதிமுக மா.செ.?" - படுத்த படுக்கையாய் கதறும் அதிமுக நிர்வாகி

Update: 2024-08-06 08:31 GMT

குமரகுரு தன்னை தாக்கியதாக அ.தி.மு.க. நிர்வாகி கிருஷ்ணன் புகார்

கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் குமரகுரு, தன்னை தாக்கியதாக, கள்ளக்குறிச்சி மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரம் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு தருவதாக குமரகுரு தெரிவித்ததாகவும், ஆனால் வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், அதுகுறித்து வாட்ஸ் அப்குழுக்களில் தனது வருத்தத்தை பதிவு செய்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில், குமரகுரு உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்து பேசிக்கொண்டிருந்தபோது, தனது மனைவி கண்முன்னே தன்னை தாக்கியதாகவும், இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்