கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புக்கு தொடர்பிருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக என்ஐஏ அதிகாரிகளுக்கு புதிய தகவல் ஒன்று கிடைத்த நிலையில், தமிழகம் மற்றும் தெலங்கானாவின் 31 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், கோவை அரபிக் கல்லூரியில் படித்த சிலர், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து, இளைஞர்களை ஆள் சேர்த்து வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இரு மாநிலங்களிலும் நடத்திய சோதனையின் முடிவில், 60 லட்ச ரூபாய் இந்திய பணமும், 18 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் மற்றும் தீவிரவாத தொடர்பான புத்தகங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில், சென்னையை சேர்ந்த முஜிபிர் ரகுமான், முகமது ஜகாரியா மற்றும் சையது முகமது புகாரி ஆகிய மூவரையும், வருகின்ற 20ஆம் தேதி புரசைவாக்கத்தில் உள்ள என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகுமாறு என்ஐஏ அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.