இறந்தும் துடித்த இதயம்.. விமானத்தில் பறந்து இன்னொரு உயிரை காப்பாற்றிய இளைஞர்

Update: 2023-10-29 09:55 GMT

ஆந்திராவில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் இதயம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு மற்றொரு இளைஞருக்கு பொருத்தப்பட்டது.

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் ஜெயபிரகாஷ் என்பவர் சில நாட்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். விஜயவாடா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று மூளைச்சாவு அடைந்துவிட்டார். அவருடைய இதயத்தை திருப்பதி தேவஸ்தான மருத்துவமனையில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த 32 வயதான கோட்டேஸ்வரராவ் ரெட்டி என்பவருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக விஜயவாடா மருத்துவமனையில் இருந்து கண்ணவரம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட ஜெயப்பிரகாஷின் இதயம் விமானம் மூலம் நேற்று மாலை ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்தது. அங்கிருந்து விரைவாக திருப்பதி தேவஸ்தான மருத்துவமனைக்கு கொண்டுவந்த டாக்டர்கள், கோட்டேஸ்வரராவ் ரெட்டிக்கு வெற்றிகரமாக பொருத்தி சாத

Tags:    

மேலும் செய்திகள்