கணவன் கட்டையால் அடித்துக் கொலை… கள்ளக்காதலால் மனைவி வெறிச்செயல்…

Update: 2023-05-31 23:54 GMT

இரவு முழுவதும் இந்த பகுதியை தூங்கவிடாமல் அலறிய குரல்… விடியற்காலை மூன்று மணியளவில் சாந்தமடைந்திருக்கிறது...


விடிய விடிய கணவனுடன் மல்லுகட்டிய மனைவி திடீரென்று சமாதானம் ஆனதற்கான விளைவுதான் இங்கு படிந்திருக்கும் ரத்தகரைகள்.

ஆம், நடந்த சண்டையில் மனைவியே கணவனை கட்டையால் அடித்து அவரது மூச்சை நிறுத்தியிருக்கிறார்.


குடும்ப சண்டை கொலையில் முடிந்த பின்னணியை தெரிந்துகொள்ள விசாரணையில் இறங்கினோம்…

கொல்லப்பட்டவர் சுப்பிரமணி. 52 வயதாகிறது. ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளம் பகுதியை சேர்ந்தவர். தறி பட்டறையில் வேலைச் செய்துவந்த சுப்பிரமணிக்கு பத்மா என்ற பெண்ணுடன் 36 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இல்லற வாழ்க்கைகான பக்குவத்தை அடைவதற்கு முன்பே இவர்கள் இருவரும் கணவன் மனைவியாக இணைந்திருக்கிறார்கள்…

அந்த மன வாழ்கைக்கு சாட்சியாக இந்த தம்பதிக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருந்துள்ளனர்… நான்கு வருடங்களுக்கு முன்பு சுப்பிரமணியின் மகள் இறந்துவிடவே, மகன் காதல் திருமணம் செய்துகொண்டு வெளியூரியில் செட்டில் ஆகியிருக்கிறார்.

இதனால் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக தனியே வசித்து வந்திருக்கிறார்கள்.

இந்த சூழலில் தான் பத்மா, கணவருக்கு இன்னொரு குடும்பம் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறார்.

வேலை விஷயமாக அடிக்கடி வெளியில் செல்லும் சுப்பிரமணி மனைவிக்கு தெரியாமல், வேறு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.

ஒரு கட்டத்தில் கள்ளக்காதலியை தன்னுடைய வாழ்க்கைதுணையாக மாற்றிகொள்ள நினைத்த சுப்பிரமணி உள்ளூரிலேயே தனியே வீடு எடுத்து கொடுத்து கள்ளக்காதலியுடன் குடும்பம் நடந்தி வந்திருக்கிறார்.

இந்த செய்தி ஊர்க்காரர்கள் மூலம் மனைவியின் காதுகளுக்கு சென்றிருக்கிறது.அதிர்ந்து போன பத்மா கள்ளக்காதலை கைவிடுமாறு கண்டித்திருக்கிறார்.ஆனால், சுப்பிரமணி மனைவியின் பேச்சை கேட்பதாக இல்லை. செலவுக்கு பணம் கொடுக்காமலும், மனைவி மீது அக்கரை காட்டாமலும் கொடுமை படுத்தி வந்திருக்கிறார்.கள்ளக்காதலி மீதிருந்த மோகம் சுப்பிரமணிக்கு மனைவி மீது வெறுப்பை உருவாக்கியிருக்கிறது.

தன்னுடைய இடத்தில் கணவர் வேறுபெண்ணை வைத்து பார்த்ததை பத்மாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.தனக்கான நியாயத்தை கேட்டு தொடர்ந்து பிரச்சனை செய்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று கள்ளக்காதலர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை பத்மா நேரடியாகவே பார்த்திருக்கிறார்.

இதனால் அன்றிரவே கணவன் மனைவி இருவருக்கும் மீண்டும் பிரச்சனை வெடித்திருக்கிறது.வாய்வார்த்தையில் தொடங்கிய பிரச்சனை ஒருகட்டத்தில் கைக்கலப்பாக மாறியிருக்கிறது.

இதனால் கணவரின் கதையை முடிக்க திட்டம்போட்ட பத்மா, இரவு சுப்பிரமணி கண்ணசந்த நேரத்தில் அவரது முகத்தில் டாய்லெட்டிற்கு பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியிருக்கிறார். பிறகு வீட்டிலிருந்த கட்டையால் சுப்பிரமணியை கண்மூடிதனமாக தாக்கி கொலைச் செய்திருக்கிறார். கொலைச் செய்த விரக்தியில் வேறெங்கும் தப்பிச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் பத்மா.

காலை பொழுது விடிந்திருக்கிறது… வீட்டு வாசலிலேயே சுப்பிரமணி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை அக்கம்பக்கத்திலிருந்தவர்கள் பார்த்திருக்கிறார்கள்.உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பத்மாவையும் கைதுச் செய்திருக்கிறார்கள்.

கணவரை கொலை செய்ததற்காக பத்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்