ஒரு இடி.. ஒரே ஒரு டிப்பர் லாரி.. 10 கிராமங்களில் கட்டான கரண்ட்.. இருளில் தவிக்குக்கும் மக்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி இடித்ததில் மின் கம்பி அறுந்து, 22 மின்கம்பங்கள் கீழே விழுந்து சேதம் அடைந்தன.
மகிமண்டலம் பகுதியில் சென்னையில் இருந்து விஜயவாடா வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் ஈடுபட்ட டிப்பர் லாரிகள், இடித்ததில் 22 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால்
பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன. மின்சாரம் இன்றி பொதுமக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.