டீச்சர் பையில் கை வைத்த மாணவி. -"ஜஸ்ட் மிஸில் கிடைத்த உயிர்" - கடலூரில் பயங்கர பரபரப்பு
அக்கறை ஜெயங்கொண்ட பட்டினம் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியில் உடல் சோர்வாக உள்ள மாணவர்களுக்கு அங்கு பணியாற்றும் ஆசிரியை, சத்து மாத்திரைகள் வழங்கி வந்துள்ளார். இந்நிலையில், மாணவி ஒருவரிடம், அவர் கொண்டு வரும் மாத்திரையை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் மாணவி, ஆசிரியை பயன்படுத்தும் தூக்க மாத்திரைகளை எடுத்ததோடு, உடன்படித்த 5 பேருக்கும் கொடுத்ததாக தெரிகிறது. இதில் ஆறு பேரும் மயக்கமடைந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. உடனே ஆசிரியை, உறவினர்களுக்கு தகவல் கொடுத்ததுடன், கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆறு பேரும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.