படையலை சாப்பிட்ட நாய்..!100 ஆண்டுகளாக விநோத திருவிழா.. பொங்கலை கொண்டாடிய அடுத்த நொடி
சிங்கிலிப்பட்டி கிராமத்தில், 100 ஆண்டுகளுக்கு முன்பு, பூஜையில் வைத்திருந்த பொங்கலை நாய் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இதனால், கிராமத்திற்கு ஆபத்து வர உள்ளதாக கருதி பொங்கல் வைத்து வழிபடுவதையே கைவிட்டுவிட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிலர் பொங்கல் வைத்து வழிபட்டபோது, கால்நடைகள் இறந்துவிட்டதாகவும், அதனால், தற்போது வரை பொங்கல் வைத்து வழிபடுவதை கைவிட்டுவிட்டதாகவும் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், விளையாட்டுப் போட்டிகள் மட்டுமே நடத்தி பொங்கலை கொண்டாடுகின்றனர். அதன்படி, நேற்று கயிறு இழுக்கும் போட்டி நடத்தப்பட்டது. அதில், பெண்களும் சிறுவர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு கயிறை இழுத்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது