தீபாவளி நேரத்தில் சென்னைக்கு மட்டும் ஸ்பெஷலாக வந்த குட் நியூஸ்..!

Update: 2023-11-11 09:20 GMT
  • செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 364.5 கோடி கன அடி. இதன் நீர் இருப்பு அளவு அக்டோபர் 30ல், 312 கோடி கன அடியாக இருந்து, நவம்பர் 9ல் 312.3 கோடி கன அடியாக அதிகரித்துள்ளது.
  • புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 330 கோடி கன அடியாக உள்ளது. இதன் நீர் இருப்பு அளவு அக்டோபர் 30ல், 258.9 கோடி கன அடியாக இருந்து, நவம்பர் 9ல் 270.9 கோடி கன அடியாக அதிகரித்துள்ளது.
  • பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 323.1 கோடி கன அடி.
  • இதன் நீர் இருப்பு அளவு அக்டோபர் 30ல், 190.4 கோடி கன அடியாக இருந்து, நவம்பர் 9ல் 186 கோடி கன அடியாக குறைந்துள்ளது.
  • சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 108.1 கோடி கன அடியாக உள்ள நிலையில், அக்டோபர் 30ல் 57.9 கோடி கன அடி நீர் இருப்பு இருந்தது. நவம்பர் 9ல் இது 62.6 கோடி கன அடியாக அதிகரித்துள்ளது.
  • 50 கோடி கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில், அக்டோபர் 30ம் தேதி 44 கோடி கன அடியாக இருந்த நீர் இருப்பு, நவம்பர் 9ல் 43.5 கோடி கன அடியாக குறைந்துள்ளது.
  • வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 146.5 கோடி கன அடியாக உள்ளது. அக்டோபர் 30ல் 31.8 கோடி கன அடியாக இருந்த நீர் இருப்பு, நவம்பர் 9ல் 33.4 கோடி கன அடியாக அதிகரித்துள்ளது.
  • இந்த ஆறு ஏரிகளில் உள்ள மொத்த நீர் இருப்பு, அக்டோபர் 30ல் 895 கோடி கன அடியாக இருந்து நவம்பர் 9ல், 908.7 கோடி கன அடியாக அதிகரித்துள்ளது.
  • ஆறு ஏரிகளின் மொத்த கொள்ளளவில், நவம்பர் 9 நிலவரப்படி, 68.73 சதவீதம் நிரம்பியுள்ளது. 2022 நவம்பர்
  • 9ல் இது 62.47 சதவீதமாக இருந்தது ஒப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்