நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே மளிகை கடை உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரகூரில் மளிகை கடை நடத்தி வரும் மனோகரின் மகனுக்கும், திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் சேந்தமங்கலத்தில் திருமணம் நடைபெற்றது. அதனையொட்டி, குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சேந்தமங்கலத்திற்கு சென்ற போது, வீட்டின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 15 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..