முகமூடி அணிந்த கும்பல் செய்த வெறிச்செயல் - பறிபோன உரிமையாளரின் உயிர்

Update: 2024-01-06 06:59 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, திம்மராஜ் என்பவர் மளிகைக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் முகமூடி அணிந்த 3 பேர் கடையில் புகுந்து, திம்மராஜை ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. ரத்த வெள்ளத்தில் மிதந்த திம்மராஜை, அருகிலிருந்த மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் திம்மராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்