சீரியலை மிஞ்சும் சொத்து பிரச்சனை-இடத்துக்காக நடுரோட்டில் நிற்கும் பேரன்-தந்தை செய்த படுகேவலமான செயல்

Update: 2023-08-22 13:39 GMT

திருப்பத்தூர் மாவட்டம் குர்பானிகுண்டா பகுதியை சேர்ந்த துரை என்பவரின் மகன் சாம்ராஜ், தனது தந்தையின் சொத்தை போலி பத்திரம் தயார் செய்து வேணுகோபால் என்பரிடம் விற்பனை செய்துள்ளார். சாம்ராஜிற்கு 8 சகோதரர்கள் உள்ள நிலையில், அவர்களிடமும் இது குறித்து தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. சாம்ராஜிடம் இருந்து வேணுகோபால் வாங்கிய நிலத்தை ராஜா என்பவர் வாங்கிய நிலையில், சாம்ராஜ் தனது பூர்வீக இடத்தை மீண்டும் மீட்க முயற்சித்துள்ளார். இந்த நிலையில், சாம்ராஜ் மகன் மோகன் தாத்தா சொத்து எனக்கே சொந்தம் எனவும், அந்த இடம் முறையாக பத்திரம் செய்யாமல் விற்பனையாகியுள்ளதாகவும் கூறி உண்ணாவிரதம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்