மகளுக்காக நடுரோட்டில் கத்தியால் வெட்டு வாங்கிய தாய் - திருப்பத்தூரில் அதிர்ச்சி

Update: 2023-09-25 06:15 GMT

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வசித்து வரும் பெண் ஒருவர், 12 வருடங்களாக தன் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் என்பவருடன் தகாத உறவில் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார். இந்நிலையில், பெங்களூருவில் வேலை பார்த்து வந்த ராஜ்குமார், சொந்த ஊர் திரும்பிய போது, தனது மகளுக்கு திருமணமானதால் தன்னால் ஏதும் அவப்பெயர் வந்துவிடக் கூடாதென அப்பெண் தகாத உறவில் இருந்து விலகியிருக்கிறார். இதனால், ஆத்திரமடைந்த ராஜ்குமார் பெண்ணின் தலை மற்றும் உடலில் சரமாரியாக கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. படுகாயத்துடன் பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்துள்ள போலீசார், ராஜ்குமாரை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்