வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த காதல் ஜோடி.மிரட்டிய பெண்ணின் தந்தை..காதலனின் பெற்றோர்கள் செய்த காரியம்
கிருஷ்ணகிரி அருகே காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பெண்ணின் தந்தை மிரட்டலுக்கு பயந்து, காதலனின் பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...மத்தூர் அருகே பெருகோபனப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரஞ்சித்குமார் மற்றும் தீபிகா. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவரும் காதலித்து வந்த நிலையில், இரு வீட்டாரும் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இதனிடையே, தனது மகளைக் காணவில்லை என தீபிகாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து, காதலர்களின் திருமணம் குறித்து அறிந்து கொண்ட தீபிகாவின் தந்தை பழனி மற்றும் உறவினர்கள், தனது மகளை திருமணம் செய்து கொண்ட ரஞ்சித்குமாரின் பெற்றோரான சரவணன் மற்றும் கீதாவை மிரட்டியுள்ளனர். அவர்களது மிரட்டலுக்கு பயந்த தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். இருவரது சடலமும் உடற்கூராய்விற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.