தனியார் ஹோட்டலை குதூகலப்படுத்திய வெளிநாட்டு அழகு பதுமை..கிறிஸ்துமஸ்க்காக செய்த சிறப்பான சம்பவம்
மாமல்லபுரம் தனியார் நட்சத்திர ஓட்டலில் சுற்றுலா பயணிகள், சமையல் கலைஞர்கள் இணைந்து, கிறிஸ்துமஸ் கேக் கலவையை உற்சாகமாக தயாரித்தனர். மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுலா பயணிகள், சமையல் கலைஞர்கள் இணைந்து, ஒயின், முந்திரி, திராட்சை உள்ளிட்டவற்றை கொண்டு கேக் கலவை தயாரித்தனர். 15 நாட்கள் இக்கலவை பதப்படுத்தப்பட்டு, கேக் தயாரிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.