பிள்ளை இல்லாத வேதனையில் தம்பதி.. ஏக்கத்தை பயன்படுத்திக் கொண்ட நபர் - திருச்சியில் பயங்கரம்
திருச்சி மாவட்டம் துறையூரில் குழந்தையை தத்தெடுத்து தருவதாக கூறி, 2 லட்ச ரூபாய் பண மோசடி செய்ததாக தனியார் பள்ளி நிர்வாகி மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
துறையூர் அடுத்த பி. மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். லாரி ஓட்டுநரான இவருக்கு, திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தையில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சுதா மற்றும் சாந்தி ஆகியோர், தங்களுக்கு தெரிந்த ஒருவரிடம் இருந்து குழந்தையை தத்தெடுத்து தருவதாக கோவிந்தராஜிடம் கூறியுள்ளனர். இதை நம்பிப் போன அவர், கோட்டப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகியான பாலகுமார் என்பவரிடம் 2 லட்சம் வரை பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்று நீண்ட நாள்களாகியும் குழந்தையை தத்தெடுத்து தராமல் மூவரும் இழுத்தடித்த நிலையில், கொடுத்த பணத்தை கோவிந்தராஜ் திருப்பி கேட்டிருக்கிறார். அப்போது பாலகுமார் கோவிந்தராஜனுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும், தனது பணத்தை மீட்டு தரும்படியும் போலீசில் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.